Breaking News
recent

pop

பெண்குறி கிளர்ச்சி நரம்புகள்

பெண்குறி கிளர்ச்சி நரம்புகள்

mnbb
பெண்குறி என்பது எலும்பின்மேல் அமைந்த சதைப்பிடிப்பான பகுதி. மேல்புறம் மயிர் வளர்ச்சி கொண்டது. இந்தப் பகுதயில் நிறைய நரம்பு நுனிகள் உள்ளதால் தொடுதலோ,. அழுத்துதலோ ஒரு பெண்ணைக்கிளர்ச்சியுறச் செய்யும்.
வெளி உதடுகள் என்பவை தோல் மடிப்புகள். இவற்றிலும் மயிர் வளர்ச்சி காணப்படும். கிளர்ச்சியுறாத நிலையில் இவை மடிந்திருக்கும். கிளர்ச்சியுற்ற நிலையில் இவை விரிந்து கொடுக்கும். உள் உதடுகள் மடிந்த இதழ்கள் ஆகும்.
நுண்ணிய ரத்தக்குழாய்கள் உள்ள பஞ்சுத்திசுக்கள் இவற்றில் உள்ளன. இவற்றில் மயிர் வளர்ச்சி இல்லை. இவை மன்மத பீடத்தின் மேற் பகுதியில் இணைகின்றன. அப்படி இணையும் போது மன்மத பீடத்தின் உறை போல விளங்குகின்றன.
வெளிப்புறப்புறுப்பு பெண்ணுக்குப் பெண் மாறுபடும். அளவு, வடிவமைப்பு, நிறம், மென்மை, மயிரின் அடர்த்தி-நிறம், மன்மத பீடத்தின் அளவு., குறியின் நுழைவாயில், கன்னித் தோல் ஆகியவை நாட்டுக்கு நாடு-இனத்துக்கு இனம்- பெண்ணுக்குப் பெண் மாறுபடும். பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படுபவை உள் உதடுகளில் அமைந்துள்ளன. இவை சுரக்கும் நீர் உதடுகளைப் பளபளப்பாக்குகிறது.
மன்மதபீடம்தான் மிகநுண்ணிய உணர்வு மையம். நுண்ணிய நரம்பு நுனிகள் ஏராளம் இதில் இணைகின்றன. கிளர்ச்சியின்போது ஆணுறுப்பைப் போல இது நீளா விட்டாலும் ஓரளவுக்குப் புடைத்து எழுகிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுதான்.
இதனைப் பெண்ணின் ஆண்குறி என்கின்றனர். காரணம் இதுவும் ஆண்குறியும் ஒரே விதமான திசுக்களினால் ஆனது. மன்மத பீடத்தின் அளவு பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. அளவில் பெரியதாக இருக்கும் மன்மதபீடம் அதிகமான சுகத்தைத்தரும் என்று நினைப்பது தவறான எண்ணம்.
அதேபோல சுயஇன்பம் அனுபவிக்கும் பெண்ணின் மன்மதபீடம் சைஸ் பெரியதாகிவிடும் என நினைப்பதும் தவறான எண்ணம். அதே போல மன்மதபீடத்தின் மேலுறையை நீக்கி விட்டால் அதிக சுகம் கிடைக்கும் என நினைப்பதும் தவறு. காரணம் மன்மதபீடம் நேரடியாகத் தொடுவதற்கு ஏற்றதல்ல. உறவின் போது பீடத்தின் மேலுறை உள்ளும் வெளியும், மேலும் கீழும் உராய்வதன் மூலம் கிடைக்கும் இன்பம் அந்த உறையை அகற்றுவதால் கிடைக்காது.
பெரினியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசனவாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இப்பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித் திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத்தெரிகிறது.
கன்னித்திரை சிலபெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்துவிடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறுபொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித் திரை கிழிந்துபோகலாம். சில பெண்கள் பிறக்கும்போதே கன்னித் திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.
பெண் குறியின் உட்பகுதி 45 டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர் ச்சியுறாத நிலையில் அதன் சுவர்கள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன. குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அதன் குறுக்களவு அமையும். குழந்தை பெறும்போது குழந்தையின் தலை வெளியே வரும் அளவு விரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண் குறி என்னும் வேறுபாடு இதற்கு இல்லை.
என்னதான் சுருங்கிய போதிலும் பெண்குறியின் உட்சுவர் ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவுவலிமை இல்லாதது. இந்த வல்லமை மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந்துள்ளது. நாயின் பெண்குறியில் இப்படி பூட்டி வைத்துக்கொள்ளும் அமைப்புள்ளது.
பெண்குறியின் உட்சுவர்த் தசைகளைச்சுருக்கும் பயிற்சிமூலம் இன்ப உணர்வுகளை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப்படுகின்றன. சிறுநீர் கழிக்கும்போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும்போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் என்று இதனைச் சொல்கின்றனர்.
பெண் குறியின் ஆழத்தில் நுண்ணிய நரம்பு நுனிகள் இல்லை. எல்லா நுனிகளும் நுழைவாயில் அருகிலேயே உள்ளன. உட்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஆழம் உணர்ச்சியை உணரவல்லது இல்லை. எனவே தான் சிறிய ஆண்குறி பெரிய ஆண்குறி என்ற வேறுபாடு பெண்குறிக்கு இல்லை என்கின்றனர்.
Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.