அதிகாலையில் உடலுறவு கொள்வதால் கிடைப்பது எத்தனை நன்மைகள் தெரியுமா…?

உலகத்திலேயே மிகவும் கொடுமையான விஷயங்களை பட்டியலிட்டோம் என்றால், அதில் காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பது கண்டிப்பாக இடம் பெறும். நம்மில் பலருக்கும் காலையில் கேட்கும் அலாரம் சத்தம் ஏதோ சங்கு ஊதும் சத்தத்தை போல் எரிச்சலை கிளப்பும். காலையில் எழுந்திருக்கவும் வேண்டும், ஆனால் அலார சத்தம் தூக்கத்தை கெடுத்தாலும் இம்சை தான்.
ஸ்நூஸ்
பட்டனை அழுத்தி விட்டு மீண்டும் உபயோகமில்லாத அந்த உறக்கத்திற்கு ஏன்
செல்ல வேண்டும்? மாறாக இப்படி களைந்த தூக்கத்தை பயன்படுத்தி, ஏன் உங்கள்
செக்ஸ் வாழ்க்கையை தளிர்க்க செய்யக்கூடாது? என்ன புரியவில்லையா? ஏன்
காலையிலேயே உடலுறவில் ஈடுபட்டு உங்கள் நாளை மகிழ்ச்சியாக தொடங்கக் கூடாது?
காலையில் உறவு கொள்வதால் உங்கள் காதல் வாழ்க்கை பயனடைவதோடு மட்டுமல்லாது
உடல் ஆரோக்கியமும் பயனை பெறும்.
அப்படி என்ன தான் பயன் என்று தானே கேட்கிறீர்கள்? இதோ, படித்து தெரிந்து கொள்ளுங்கள்!
சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம்
காலையில்
ஒரு கப் டீ மற்றும் காலை உணவுடன் பொழுதை தொடங்குபவர்களை விட, உடலுறவுடன்
தங்கள் பொழுதை தொடங்குபவர்கள் தான் மிகுந்த ஆரோக்கியத்துடனும்
சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள்.
அன்யோன்யம் அதிகமாகும்
காலையில்
உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்ஸின் என்னும்
ரசாயனம் வெளிப்படும். இதனால் நாள் முழுவதும் அந்த ஜோடி அன்யோன்ய உணர்வுடன்
இருப்பார்கள்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
காலையில்
உடலுறவு கொள்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது போக,
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் திடமாக்க உதவும்.
சளி, காய்ச்சலைத் தடுக்கலாம்
நம்பினால்
நம்புங்கள் – காலையில் உடலுறவு கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் ஃப்ளூ
போன்றவைகள் உங்களை அவ்வளவு எளிதில் அண்டாது. மேலும் உங்கள் கூந்தல், சருமம்
மற்றும் நகங்களின் தரமும் மேம்படும்.
நெஞ்சு வலி மற்றும் வாதம் தடுக்கப்படும்
ஒரு
வாரத்தில் காலையில் குறைந்தது 3 முறையாவது உடலுறவு வைத்துக் கொண்டால்
நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாடு குறைவாக இருக்கும்.
No comments:
Post a Comment