Breaking News
recent

pop

உடல் உறவின் போது இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க!

உடல் உறவின் போது இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க!

01
சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உறவின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடலாம். மூடு மாறக் காரணமாகி விடலாம். குறிப்பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களின் மூடை ஸ்பாயில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.
பெட்ரூமில் மட்டும்தான்… சில பெண்களுக்கு பெட்ரூமில் மட்டும்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள பிடிக்கும். இதை அவர்கள் கண்டிஷனாக கடைப்பிடிப்பார்கள். பெட்ரூமைத் தாண்டி வேறு எங்காவது கூப்பிட்டால் வர மறுத்து விடுவார்கள். பிடிவாதமாகவும் இருப்பார்கள். இது கணவர்களை டென்ஷனாக்கி விடுகிறதாம்.
பெட்ரூமில் மட்டுமல்லாமல், சமையல் அறை, ஹால், மொட்டை மாடி, மாடிப் படி என விதம் விதமான இடங்களில் உறவு வைத்துக் கொள்வதில் ஆண்கள் பொதுவாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதை மனைவி மறுக்கும்போது அந்த கணவனுக்கு எரிச்சலாகி விடுகிறதாம், மூட் அவுட் ஆகி விடுகிறதாம்.
ஆனால் பெண்கள் இவ்வாறு மறுக்க வெட்கம், தயக்கம்தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதேசமயம், செக்ஸ் உறவின்போது இருவருக்கும் நல்ல மூட் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் பாதுகாப்பானதாக கருதினால் கணவன் கூப்பிடும் இடத்திற்கு மனைவி போவதில் தயக்கம் காட்டுவது தேவையில்லை என்பது இவர்களின் கருத்து. காரணம், இப்படி வித்தியாசமான இடங்களில் செய்யும்போது கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் கூட வித்தியாசமான அனுபவம் கிடைப்பதால்.
ஓரல் செக்ஸ்… பல பெண்களுக்கு வாய் வழி உறவில் உடன்பாடு உண்டு என்றாலும் கூட சிலருக்கு இதில் வெட்கம் மற்றும் அறுவறுப்பு இருக்கும். அதெப்படி அதைக் கொண்டு வாயில் … என்று அவர்கள் தயங்கலாம். இதைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. இருப்பினும் இந்தத் தயக்கம், ஆண்களுக்கு மூட் அவுட் பண்ணி விடுகிறதாம். இதைத் தவிர்க்க முதலில் ஆண்கள் களத்தில் இறங்குவது நல்லதாம். மனைவியிடம் கணவன் முதலில் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கு அந்த சுகத்தைப் புரிய வைக்கலாம். பின்னர் இதேபோல எனக்குச் செய் என்று மனைவியிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
ஓரல் செக்ஸ் என்பது இருவருக்கும் மனம் ஒத்து வரும்போதுதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் ஓரல் செக்ஸ் வேண்டாம் என்று ஆண் கேட்டு பெண் மறுத்தாலும் அல்லது பெண் கேட்டு ஆண் மறுத்தாலும் சரி செக்ஸ் மூட் மாறிப் போய் விடும் அபாயம் உள்ளதாம்.
ராத்திரி மட்டும்தான்… சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள பிடிக்கும். பகல், காலை, மதியம் என பிற நேரங்களை அவர்கள் விரும்புவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள். அதாவது பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது அவர்களின் பாலிசி. அதேசமயம், பெண்களோ, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர்க ள். இது ஆண்களின் மூ்டை காலி செய்து விடுமாம்.
கடி, கிள்ளு… பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர், கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் லேசாக கடிப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யும்போது அதை ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். அதேசமயம், இதை மனைவிமார்கள் தங்களுக்குச் செய்ய விரும்பினால் பல ஆண்கள் விரும்புவதில்லையாம். வலிக்கும் என்பதுதான் ஆண்கள் இதற்குச் சொல்லும் காரணம்.
இதையேதான் அவர்கள் மனைவிமார்களிடம் செய்கிறார்கள் என்றாலும், அதையே மனைவி செய்தால் இவர்கள் ஏற்பதில்லை. இதுபோன்று நடக்கும்போது மனைவியருக்கு கடுப்பாகி விடுகிறதாம். இவர் மட்டும் கடிக்கலாம், நான் கூடாதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். எனவே பரஸ்பர கடி, கிள்ளு இருக்குமாறு பார்த்துக் கொள்வது உத்தமமாம்.
இப்படி சின்னச் சின்னத் தவறுகள் நிறைய இருக்கின்றன. இதைத் தவறு என்று கூற முடியாது. மூடை கெடுக்கும் காரணிகள் என்று கூறலாம். இதைத் தவிர்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சப்ஜாடான உறவு அமையும் என்பதில் சந்தேகமில்லை

Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.