Breaking News
recent

pop

இரவெல்லாம் செல்போன் சார்ஜ் போடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் படியுங்க…

இரவெல்லாம் செல்போன் சார்ஜ் போடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் படியுங்க…


cellphone accident 600 1
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அத்தனை கண்டுபிடிப்பு களையும் ரசித்து அனுபவிக்கிறோம். ஆனால் அவற்றை பற்றிய அடிப்படை விஷயங்களை கொஞ்சமாவது அறிந்துவைத்திருக் கிறோமா என்றால் இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். இதன் விளைவு என்னவென்பதை வியாசர்பாடி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
சென்னை வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனி, 2-வது தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (52). இவருடைய மனைவி ராணி (45). மகன் தினேஷ் (25). இன்று (25.1.2016) அதிகாலை 5 மணியளவில் இவர்கள் வீட்டில் திடீரென தீப்பற்றியது. இது குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் அங்கே விரைந்து வந்து தீயை அணைத்து, கை கால்களில் தீக் காயங்களுடன் இருந்த மூவரையும் காப்பாற்றினர்.
பின்னர் மூவரும் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டனர். அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தச் சென்ற போலீசார் அங்கே, செல்போன் ஒன்று சுக்கலாக உடைந்தும், அதே வேளையில் நின்று நிதானமாக எரிந்து கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் தெரியவந்தது.
இது குறித்து மருத்துவ சிகிச்சையில் இருந்த மூவரிடமும் விசாரணை நடத்தினர். சம்பவம் பற்றி அவர்கள் கூறும்போது, ” வழக்கமாக நாங்கள் செல்போன்களை இரவில், சார்ஜரில் போட்டுவிட்டு தூங்கி விடுவோம். காலையில் எழுவதற்கு அதே செல்போனில்தான் அலாரம் வைப்போம். இன்றும் வழக்கம்போல் அப்படி அலாரம் வைத்துவிட்டு படுத்தோம். அலாரம் சரியாக 5 மணிக்கு அடித்தது.
செல்போனை சைலண்ட் செய்வதற்காக கையை வைத்ததும் டமாரென செல்போன் வெடித்தது. அதேநேரம் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டரிலும் லேசாக கியாஸ் லீக் ஆகி இருந்திருக்கிறது. இதை நாங்கள் கவனிக்கவில்லை. வெடித்த செல்போன் துண்டுகளால் வீடு முழுவதும் தீப்பற்றியது. தீயணைப்புத் துறையினர் வந்து எங்களைக் காப்பாற்றினர்” என்றனர்.
செல்போன் வெடித்ததும் கியாஸ் சிலிண்டர் லீக் ஆகி அதுவும் தீப்பற்றிய சம்பவம், சென்னையை அதிகாலை வேளையில் பரபரப்பில் ஆழ்த்தியது. இரவெல்லாம் செல்போனை சார்ஜில் போட்டு வைப்பவர்கள் அதை இனிமேலாவது தவிர்ப்பது நல்லது!
Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.